போதைப்பொருள் இல்லாத, பாதுகாப்பான இலங்கை.
போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிப்பதற்கும் எதிர்கால சந்ததியினரைப் பாதுகாப்பதற்கும் அரச நிறுவனங்கள், பாதுகாப்புப் படைகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் இலங்கையின் தேசிய மட்டத்திலான நடவடிக்கை.
போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் மாணவர் பாதுகாப்பில் தேசிய பொறுப்பு: மகா சங்கத்தினர் விசேட ஊடக சந்திப்பு
போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான "ரட்டம எகட" தேசிய நடவடிக்கையின் வாராந்த ஊடக சந்திப்புத் தொடரின் கீழ், போதைப்பொருள் அச்சுறுத்தலை எதிர்கொள்வதில் உள்ள தேசிய பொறுப்பு மற்றும் மாணவர்களைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து மகா சங்கத்தினர் கருத்து வெளியிடும் ஊடக மாநாடு இன்று (16) "ரட்டம எகட" தேசிய நடவடிக்கை - பிரதான அலுவலகம் மற்றும் ஊடக மையத்தில் நடைபெற்றது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் வண. கரந்தகொல்லே விஜிததிஸ்ஸ தேரர் மற்றும் கொழும்பு 05 லும்பினி கல்லூரியின் உதவி அதிபர் வண. திவிதுரே சமந்த தேரர் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
முழு செய்தியையும் படிக்கவும்ரட்டம எகட விசேட ஊடக மாநாடு: இலங்கை சுங்கத் திணைக்களம் மற்றும் தபால் திணைக்களத்தின் பங்களிப்பு
ரட்டம எகட விசேட ஊடக சந்திப்பு 2025.10.23 | மு.ப. 9.30 | ரட்டம எகட ஊடக மையம் போதைப்பொருள் ஒழிப்புக்கான "ரட்டம எகட" தேசிய நடவடிக்கையின் கீழ் விசேட ஊடக சந்திப்பொன்று இன்று (23) ரட்டம எகட பிரதான அலுவலகம் மற்றும் ஊடக மையத்தில் இடம்பெற்றது. போதைப்பொருள் தடுப்பில் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பங்களிப்பு மற்றும் தபால் வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவதைத் தடுப்பதில் தபால் திணைக்களத்தின் தலையீடு தொடர்பாக இலங்கை சுங்கப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா மற்றும் மத்திய தபால் பரிமாற்றக மேற்பார்வையாளர் மனோஜனி நாணயக்கார ஆகியோர் விளக்கமளித்தனர்.
மேலும் வாசிக்க


