மீண்டும் செய்திகள் பக்கத்திற்கு
போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் மாணவர் பாதுகாப்பில் தேசிய பொறுப்பு: மகா சங்கத்தினர் விசேட ஊடக சந்திப்பு
October 16, 2025|ரட்டம எகட ஊடக மையம்

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான "ரட்டம எகட" தேசிய நடவடிக்கையின் வாராந்த ஊடக சந்திப்புத் தொடரின் கீழ், போதைப்பொருள் அச்சுறுத்தலை எதிர்கொள்வதில் உள்ள தேசிய பொறுப்பு மற்றும் மாணவர்களைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து மகா சங்கத்தினர் கருத்து வெளியிடும் ஊடக மாநாடு இன்று (16) "ரட்டம எகட" தேசிய நடவடிக்கை - பிரதான அலுவலகம் மற்றும் ஊடக மையத்தில் நடைபெற்றது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் வண. கரந்தகொல்லே விஜிததிஸ்ஸ தேரர் மற்றும் கொழும்பு 05 லும்பினி கல்லூரியின் உதவி அதிபர் வண. திவிதுரே சமந்த தேரர் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

